A repeating pattern of interlocking red and teal curved U-shaped lines forming a wave-like design.
A repeating pattern of interlocking red and teal curved U-shaped lines forming a wave-like design.

நம்பிக்கை அலகுகளுடன் உங்களின் நிதிசார் எதிர்காலத்தை ஆரம்பியுங்கள்

முதலிடுவதற்கான மிகவும் இலகுவான மற்றும் அறிவுப்பூர்வமான வழி. தொழிற்துறை நிபுணர்களின் வழிகாட்டலுடன், 1,000 ரூபாயிலிருந்து உங்கள் பல்வேறுபட்ட முதலீட்டுத் தெரிவை உருவாக்க ஆரம்பியுங்கள்.
A repeating pattern of interlocking red and teal curved U-shaped lines forming a wave-like design.

யூனிட் டிரஸ்ட் என்பது என்ன?

நம்பிக்கை அலகு என்பதை, ஏனைய முதலீட்டாளர்களுடன் இணைந்து உங்களது பணத்தைச் சேமிப்பதற்கான ஒரு புத்திசாலித்தனமான வழியாகக் கருதலாம். ஒரு பெரிய கட்டடம் போன்ற ஒரு சொத்தை நீங்கள் தனியாக வாங்குவதற்குப் பதிலாக, நீங்களும் இன்னும் பலரும் இணைந்து ஒரு மத்திய நிதியத்திற்குப் பணத்தைப் பங்களிக்கிறீர்கள். பின்னர், ஒரு நிபுணத்துவ நிதிய முகாமையாளர் இந்தத் திரட்டப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி, பங்குகள் அல்லது திறைசேரி உண்டியல்கள் போன்ற பல்வேறு சொத்துக்களை வாங்குகிறார்.

இதில் உள்ள சிறந்த அம்சம் என்னவென்றால்: இந்தச் சொத்துக்களின் மதிப்பு உயரும்போது, உங்கள் முதலீட்டின் மதிப்பும் உயர்கிறது. நீங்கள் தனியாக மேற்கொள்ள முடியாத பெரிய மற்றும் அதிக இலாபம் தரக்கூடிய முதலீடுகளில், ஒரு பகுதியை உங்களது வசதிக்கேற்ப உரிமையாக்கிக்கொள்ள இது ஒரு சிறந்த வழியாகும்.

நம்பிக்கை அலகு என்பது ஒரு சிறந்த முதலீடாகுமா?

நீண்ட கால இலக்குகளுக்கு, நம்பிக்கை அலகு என்பது சிறந்த தெரிவாக அமையலாம்.
A repeating pattern of interlocking red and teal curved U-shaped lines forming a wave-like design.
A repeating pattern of interlocking red and teal curved U-shaped lines forming a wave-like design.
A woman reading an article with the headline "IS UNIT TRUST A GOOD INVESTMENT."
பன்முகப்படுத்தப்பட்டது, பாதுகாப்பானது
பல்வேறு சொத்துகளில் உங்களின் பணத்தை நாம் பரவலாக முதலிடுவோம். இதனூடாக ஏற்படக்கூடிய அபாயங்கள் குறைக்கப்படுவதுடன், ஒற்றை முதலீட்டை விட அதிகம் உறுதியான வருமதிகளை உருவாக்க உதவும்.
நிபுணத்துவமான முறையில் நிர்வகிக்கப்படுகிறது
நீங்கள் ஒரு சந்தை நிபுணராக இருக்க வேண்டியதில்லை. சிறந்த வாய்ப்புகளை இனங்காண்பதற்காக ஆய்வுகளை மேற்கொள்வதில் நேரத்தை செலவிடும் உயர் தகைமை வாய்ந்த நிபுணர்களால் உங்கள் முதலீடு நிர்வகிக்கப்படுகிறது. கடினமான காரியத்தை அவர்கள் மேற்கொள்வதால், நீங்கள் அதைப் பற்றிய கவலைகளை கொண்டிருக்க வேண்டியதில்லை.
வரலாற்று தரவுகளின்படி, சிறந்த வருமதியை வழங்கக்கூடியது
சந்தைகள் ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருந்தாலும், இந்த வகையான முதலீடுகளுக்கான நீண்ட கால அடிப்படையிலான போக்கு என்பது தொடர்ச்சியாக பணவீக்கம் மற்றும் பாரம்பரிய வங்கி வட்டி வீதங்களை விட உயர்வானதாக அமைந்துள்ளன.

நம்பிக்கை அலகு முதலீட்டின் அனுகூலங்கள்

செல்வத்தைக் கட்டியெழுப்புவதற்கான பலம் வாய்ந்த நுட்பமாக நம்பிக்கை அலகை அமைந்திருப்பதுடன், பல பிரதான அனுகூலங்களை உங்களுக்கு வழங்குகிறது.
A young woman intently reading a book titled "The Benefits of Unit Trust Investing."

முதலீட்டை மேற்கொள்ள உங்களிடம் பெரிய அளவிலான பணம் இருக்க வேண்டியதில்லை. வெறும் ரூ. 1,000 தொகையுடன் உங்கள் முதலீட்டை ஆரம்பிக்கலாம். அதனூடாக, தனித்து உருவாக்கினால் அதிக செலவை ஏற்படுத்தக்கூடிய, நிபுணர்களால் நிர்வகிக்கப்படும் பல்வகைப்பட்ட முதலீட்டுப் பிரிவை நீங்கள் இலகுவாகப் பெற முடியும்.

ஏனைய சில முதலீடுகளைப் போலன்றி, நீங்கள் மேலதிக பணத்தைக் கொண்டிருந்தால், உங்கள் நம்பிக்கை அலகில் எந்நேரத்திலும் அதிக பணத்தை சேர்க்கலாம். அதேபோல உங்கள் பணத்தை மீளப்பெற வேண்டுமாயின், எவ்விதமான தண்டங்களுமின்றி அதனைப் பெறலாம்.

சந்தை தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்காக பல மணி நேரத்தை செலவிடுவதிலிருந்து விடுபடுங்கள். நிபுணத்துவ நிதிய முகாமையாளர்களினால் சகல ஆய்வுகளும் மூலோபாயங்களும் மேற்கொள்ளப்படுவதால், இதர விடயங்களில் நீங்கள் நிம்மதியாக கவனம் செலுத்தலாம்.

உங்கள் பணம் வளர்ச்சியடைவதை காணத் தயாரா? கணக்கொன்றை ஆரம்பியுங்கள்

ரூ. 1000 எனும் சிறிய தொகையுடன் நீங்கள் ஆரம்பித்து – காலப்போக்கில் அதில் மேலும் தொகையை வைப்புச் செய்யலாம். சிறந்த பெறுபேறுகளுக்கு, இதனை ஒரு நீண்ட கால முதலீடாக கருதி செயற்படுவதுடன், உங்களின் தினசரி செலவுகளுக்கு அவசியமற்ற பணத்தை இதற்கு பயன்படுத்தவும்.